கிரிக்கெட்

விம்பிள்டன் டென்னிஸ்: நேரில் கண்டு ரசிக்கும் சச்சின்

சச்சின் தெண்டுல்கர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் மற்றும் உலகின் நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜானிக் சின்னர் மோதும் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது .

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.