கிரிக்கெட்

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம் - இந்தோனேசியா இன்று மோதல்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது.

இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

வங்காளதேசம் - இந்தோனேசியா இன்று மோதல்

இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT