மகளிர் ஆசிய கோப்பை 
கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை; இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி

தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா 59 ரன்கள், ஷாபாலி வெர்மா 68 ரன்கள் விளாசினர்.

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேசத் திடலில் நடைபெற்றது. இந்தியா இலங்கை இடையிலான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் 17 ரன்கள், கமலினி 15 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மிதாலி அயோத்யா, சமாரி அத்தப்பத்து மற்றும் சௌமுடி பிரபோதா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி முடிவில், 20 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்தது. இத்னையடுத்து இந்திய மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT