துபாய்,
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்றிரவு 8 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பிய னான இலங்கை அணி, பாகிஸ்தானுடன் மல்லுகட்டுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.