கிரிக்கெட்

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

10,840 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் நடக்கிறது. 43 விளையாட்டுகளில் மொத்தம் 469 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 46 நாடுகளை சேர்ந்த 10,840 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 36 விளையாட்டுகளில் களம் காணுகிறது. தமிழகத்தை சேர்ந்த 35 பேரும் (21 வீரர்கள், 14 வீராங்கனைகள்) அடங்குவார்கள்.

ஆசிய விளையாட்டின் அதிகாரபூர்வ தொடக்க விழா (19-ந் தேதி) நடக்கும் முன்பே சில போட்டிகள் தொடங்கி விட்டன. இதன்படி கூடைப்பந்து கடந்த 10-ந் தேதியும், கால்பந்து 14-ந் தேதியும், மாடர்ன் பென்டத்லான், கைப்பந்து 16-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது. பெண்கள் கிரிக்கெட், டெக்பால் போட்டிகள் இன்றும், ஆக்கி, சாப்ட் டென்னிஸ் போட்டி நாளையும் தொடங்குகின்றன.

இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அய்ச்சி நகரில் இன்று முதல் 22-ந் தேதி வரை அரங்கேறுகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், வங்காளதேசம், சீனா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்கின் றன. 'நாக்-அவுட்' முறையில் நடைபெறும் இந்த போட்டி கால்இறுதியில் இருந்து ஆரம்பமா கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் முடிந்த பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பி யன் பட்டம் வென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அந்த உத்வேகத்து டன் இந்த போட்டியில் களம் இறங்குகிறது. கடந்த முறை தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய அணி, அதனை தக்கவைக்கும் என்று நம்பலாம்.

இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் வங்காளதேசம்- சீனா (அதிகாலை 5.30 மணி), பாகிஸ்தான்- தாய்லாந்து (காலை 10.30 மணி) அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் கால்இறுதியில் இலங்கை- மலேசியா (அதிகாலை 5.30 மணி), இந்தியா-ஜப்பான் (காலை 10.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

SCROLL FOR NEXT