கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

இந்திய அணி நிர்ணயித்த இலக்கை ஆஸ்திரேலிய அணி 36.1 ஓவரிலேயே கடந்தது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் 54 ரன்களும், பிரதிகா ரவல் 52 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 252 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர் போப் மற்றும் ஜார்ஜியா ஆகியோரின் அபார பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 36.1 ஓவரிலேயே இலக்கை கடந்தது. போப் 80 ரன்கள் எடுத்தார். போப் சதமடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.