கான்பெரா,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடந்து வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.