துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையை வெளியிட்டள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா 124 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வயிடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஆஸ்திரேலியா 163 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஒரு புள்ளியில் இருந்து நான்கு புள்ளிகள் முன்னேறி 128 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.