வதோதரா,
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் டெல்லி அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். லிசில் லீ 37 ரன்களும், ஷாபாலி வர்மா 20 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்து அசத்தினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிலைத்து ஆடிய லாரா வால்வார்ட் 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.