கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக குஜராத் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் அஸ்லி கார்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்

வதோதரா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.)டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற உள்ள 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் அஸ்லி கார்ட்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.