கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக மஹேலா ஜெயவர்தனே நியமனம்

பயிற்சியாளர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன

முன்னாள் இலங்கை அணியின் கேப்டனும், அனுபவமிக்க கிரிக்கெட் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ்

இதனை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய பொறுப்பின் மூலம் அணியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் செயல்பாடுகளையும் அவர் கவனிக்க உள்ளார். அணியின் வியூகங்களை உருவாக்குவது, திறமையான வீராங்கனைகளைக் கண்டறிவது, வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய மஹேலா ஜெயவர்தனே, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், தற்போது டெல்லி

கேபிடல்ஸ் மகளிர் அணியிலும் தனது அனுபவத்தைப் பயன்படுத்த உள்ளார். 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு மும்பை அணியுடனான அவரது பயிற்சியாளர் பயணம் முடிவுக்கு வந்தது

SCROLL FOR NEXT