கிரிக்கெட்

வாரணாசி புதிய கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள்?

இந்த ஆய்வின் முடிவை பொறுத்தே வாரணாசியில் போட்டிகள் நடைபெறுமா என்பது இறுதி செய்யப்படும்.

வாரணாசி,

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரை மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய நகரங்களை போட்டி நடத்தும் இடங்களாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரில் புதிதாக உருவாகி வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மகளிர் பிரீமியர் லீக் 2027 போட்டிகளை நடத்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வாரணாசியில் உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை போட்டிகளுக்கு பயன்படுத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இதற்காக கிரிக்கெட் செயல்பாடுகள் தொடர்பான குழு மைதானத்தை நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைதானத்தின் ஆடுகளம், வடிகால் வசதி, மைதான பராமரிப்பு, போட்டி நடத்துவதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த போட்டி ஏற்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த ஆய்வின் முடிவை பொறுத்தே வாரணாசியில் போட்டிகள் நடைபெறுமா என்பது இறுதி செய்யப்படும்.

SCROLL FOR NEXT