விலோமூர் பார்க்,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்க கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான லாரா வோல்வார்ட், அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 92 ரன்கள் விளாசினார். மற்ற ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.