கிரிக்கெட்

மகளிர் டி20 தரவரிசை: நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ஸ்ரீ சரணி... முன்னேறிய தீப்தி சர்மா!

ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

துபாய்,

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சமீபத்திய மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேவேளையில், இந்திய அணியின் ஸ்ரீ சரணி முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.

8 விக்கெட்டுகள்

தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள தீப்தி சர்மா 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

6-வது இடம்

ஆசியக் கோப்பையில் வெளிப்படுத்தி வரும் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தீப்தி சர்மா மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஸ்ரீ சரணிஉள்ளார்.

தீப்தி சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக மகளிர் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT