கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் பபந்துவீச்சை தேர்வு செய்தார்

லண்டன்,

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வரு கிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் பபந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.