கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அயர்லாந்து பந்துவீச்சு

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

பிரிஸ்டல்,

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் இன்று நடைபெற்ற வரும் 27-வது லீக் ஆட்டத்தில் (குரூப் பி) வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.