கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

லண்டன்,

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை வங்காளதேசம் நிர்ணயித்துள்ளது.

10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் - வங்காளதேசம் மோதல்

இதில் சவுத்ஹம்டன் நகரில் இன்று நடைபெற்றுவரும் 15வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷெர்னா அக்தர் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT