கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மான்செஸ்டர்,

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் இன்று நடைபெற்ற வரும் 26-வது லீக் ஆட்டத்தில் (குரூப் ஏ) பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பெரோஷா அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி தரப்பில் ஐரிஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பபிதி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.