கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

37 வயது வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் இடம் பெற்றுள்ளார்.

கேப்டவுன்,

10-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. லாரா வோல்வார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் 37 வயது வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் இடம் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், ஷப்னிம் இஸ்மாயில், சினாலோ ஜஃப்டா, மரிசான் காப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், கராபோ மெசோ, நோன்குலுலெகோ ம்லாபா, கெய்லா ச்ஹூனே, ட்ரைக்ஹூன், கெய்லா ச்ஹூன், ட்ரைக்ஹூன், நீகெர்க்.