கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது

பிரிஸ்டல்,

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் இன்று நடைபெற்ற வரும் 27-வது லீக் ஆட்டத்தில் (குரூப் பி) வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. அயர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. சினெல் ஹென்றி அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.