கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு

லண்டன்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா பேட்டிங் தேர்வு

இந்த போட்டித்தொடரில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குரூப் 1 பிரிவில் லண்டன் லார்ட்சில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அணி விவரம் பின்வருமாறு:

ஆஸ்திரேலியா: பெத் மூனி (விக்கெட் கீப்பர்), ஜார்ஜியா வோல், போப் லிட்ச்பீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல் சதர்லேண்ட், நிக்கோலா கேரி, சோபி மோலினக்ஸ் (கேப்டன்), கிம் கார்த், லூசி ஹாமில்டன்.

இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர், கிராந்தி கவுட்

வெற்றி மிக அவசியம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது மிக அவசியம் ஆகும். 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி, இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரை இறுதிக்கு முன்னேறும். மாறாக தோற்றால், 6 புள்ளியுடன் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்ததிடம் தோல்வி அடைந்தால்தான் இந்தியாவால் அரை இறுதியை எட்ட முடியும். அந்த வகையில் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.