கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 30-ந் தேதி தொடங்குகிறது. இதன் பயிற்சி ஆட்டங்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் குழுமம் பயிற்சி ஆட்டங்களையும் ஒளிபரப்பு செய்கிறது. பயிற்சி ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

முதல் நாள் பயிற்சி ஆட்டங்களில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (24-ந் தேதி), 2-வது நாள் ஆட்டங்களில் இந்தியா-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (25-ந் தேதி), 3-வது நாள் ஆட்டங்களில் பாகிஸ்தான்-வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் (26-ந் தேதி), 4-வது நாள் ஆட்டங்களில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா-இலங்கை (27-ந் தேதி), 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ்-நியூசிலாந்து (28-ந் தேதி) அணிகள் சந்திக்கின்றன.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்