கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டி வாய்ப்பை தக்க வைத்த வங்காளதேசம்

வங்காளதேசத்தின் புள்ளி சதவீதம் 66.67% ஆக உயர்ந்து, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மெல்போர்ன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் வங்காளதேசஅணி தனது இறுதிப்போட்டி வாய்ப்பை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டார்வின் முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றதன் மூலம் வங்காளதேசத்தின் புள்ளி சதவீதம் 66.67% ஆக உயர்ந்து, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா தோல்வியடைந்தாலும் 77.78% புள்ளி சதவீதத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; தென்னாப்பிரிக்கா 75% உடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 72.22% உடன் 3-வது இடத்திலும் உள்ளன.

விதிமுறைகளின்படி லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளி சதவீதம் கொண்ட முதல் இரண்டு அணிகளே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவதும், அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் அதிகபட்ச புள்ளிகளைச் சேர்ப்பதும் வங்காளதேசத்தின் இறுதிப்போட்டி கனவுக்கு முக்கியமானதாக இருக்கும்.

மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற இந்த வெற்றி வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.