கிறைஸ்ட்சர்ச்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற பட்டியலில் விராட் கோலியை முந்தியுள்ளார் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். 6 பந்துகளை சந்தித்த அவர் ரன் எதுவும் எடுக்காமல் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற பட்டியலில் விராட் கோலியை முந்தியுள்ளார்.
விராட் கோலி 7 முறை டக் அவுட் ஆகி இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தநிலையில், தற்போது 8 டக் அவுட்டுடன் அந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமலும், தேவ்தத் படிக்கல் 21 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். துருவ் ஜுரெல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்.