கிரிக்கெட்

தமிழ்நாடு சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யோமகேஷ் நியமனம்

50 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள யோமகேஷ், 1,119 ரன்கள் எடுத்ததோடு, 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சென்னை,

நடப்பு சீசனுக்கான (2026-27) தமிழ்நாடு சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் (அனைத்து வடிவிலான ஆட்டம்) தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் ஆல்-ரவுண்டர் வி.யோமகேசும், உதவி பயிற்சியாளர்களாக ஆர்.சீனிவாசன், ஹரிஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2020-ல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற யோ மகேஷ், 50 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, இரண்டு சதங்களுடன் 1,119 ரன்கள் எடுத்ததோடு, 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 61 லிஸ்ட் ஏ போட்டிகளில் இருந்து 93 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் இருந்து 52 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார்.