கிரிக்கெட்

சென்னை அணியில் இணைந்த இளம் வீரர்

இதனால் அவர் தொடரிலிருந்து விலகினார்.

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்ப ரம் ஸ்டேடியத்தில் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சென்னை அணியின் ராமகிருஷ்ணா கோஷ் சிறப்பாக பந்துவீசினார். அந்த போட்டியில் ராமகிருஷ்ணா கோஷ்-க்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணா கோஷ்-க்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி இளம் வீரர் மேக்னெய்ல் ஹேட்லி சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.