கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க இளம் வீரர் புதிய சாதனை

அவர் 101 ரன்கள் விளாசி தனது முதல் சர்வதேச இருபது ஓவர் சதத்தை பதிவு செய்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 101 ரன்கள் விளாசி தனது முதல் சர்வதேச இருபது ஓவர் சதத்தை பதிவு செய்தார்.அவருக்கு 20 வயது 161 நாட்கள் மட்டுமே.

இதன் மூலம் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களில், இருபது ஓவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்கு முன்பு, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 279 நாட்களில் இருபது ஓவர் சர்வதேச சதம் அடித்திருந்தார். அந்தச் சாதனையை பிரிட்டோரியஸ் முறியடித்துள்ளார். 

SCROLL FOR NEXT