புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங். யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது தோனி தான். அணியில் இருந்து யுவராஜ்சிங்கை ஓரங்கட்டி விட்டார் என்று யோக்ராஜ்சிங் அடிக்கடி வெளிப்ப டையாக குற்றம் சாட்டி வந்தார். இதே போல் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான கபில்தேவ் மீதும் சில குற்றச் சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த நிலையில் தந்தையின் சர்ச்சைக்குரிய புகார்கள் குறித்து முதல்முறையாக யுவராஜ்சிங் வாய் திறந்துள்ளார். யுவராஜ் அளித்த ஒரு பேட் டியில்,
'கபில்தேவ் மற்றும் தோனி பற்றி எனது தந்தை கூறிய கருத்துகளுக்காக அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். கபில் தேவ் இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவர்களிடையே (யோக்ராஜ்- கபில்தேவ்) எத்தகைய உறவு இருந்தது என்பது தெரியாது. அந்த சமயத்தில் நான் பிறக்கவே இல்லை. டோனியுடன் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அந்த வார்த்தைகள் என்னுடையது அல்ல என்பதை வீரர்கள் அறிவார்கள். அவர்கள் மீது நான் மிகுந்த மரி யாதை வைத்துள்ளேன்' என்று குறிப்பிட்டார்.