கிரிக்கெட்

ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட யுவராஜ்சிங் முடிவு

ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட யுவராஜ்சிங் முடிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஹீரோவான இந்திய அதிரடி ஆல்-ரவுண்டர் 38 வயதான யுவராஜ்சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வை கைவிட்டு பஞ்சாப் அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலாளர் புனீத் பாலி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் நீண்ட யோசனைக்கு பிறகு பஞ்சாப் அணிக்காக குறைந்தது 20 ஓவர் போட்டிகளில் விளையாட அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு மறுபடியும் விளையாடுவதற்கு அனுமதிகோரி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அனுமதி கிடைத்தால் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடுவேன் என்று யுவராஜ்சிங் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்