கிரிக்கெட்

டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்

டெல்லி அணியின் பயிற்சி குழுவை மாற்ற அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி செயல்பட்டார். வேணுகோபால் ராவ், முனாப் பட்டேல் உதவி பயிற்சியாளராக பணியாற்றினர். இதில் டெல்லி அணி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் டெல்லி அணி யின் பயிற்சி குழுவை மாற்ற அந்த அணி நிர்வா கம் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பேட்டிங்கை பலப்படுத்த அடுத்த சீசனில் டெல்லி அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் இணைய இருக்கிறார். பேச்சுவார்த்தையில் அவரும் இப்பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டி ருப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.