Image Courtesy: AFP  
கிரிக்கெட்

ஐ.பி.எல் வரலாற்றிலேயே மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆன யுஸ்வேந்திர சாஹல்

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் சாஹல் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் மூன்று சிக்ஸர்களை அடித்தனர். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு யுஸ்வேந்திரா சாஹல் சொந்தக்காரர் ஆனார். அவரது பந்துவீச்சில் மட்டும் 224 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பியூஷ் சாவ்லா. அவரது பந்துவீச்சில் 222 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா (206 சிக்ஸர்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (202 சிக்ஸர்கள்) உள்ளனர்.

SCROLL FOR NEXT