சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங், அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜாகீர் கானை நியமிக்க தோனி தான் பரிந்துரைத்ததாக சி.எஸ்.கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக மகேந்திர சிங் தோனி தொடர்வார் என சி.எஸ்.கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளம்மிங் விலகியதை தொடர்ந்து, அப்போறுப்பில் ஜாகீர் கானை நியமிக்க தோனி தான் பரிந்துரைத்தார். ஜாகீர் கானின் வழிகாட்டுதல்கள் அணியின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக தோனி தொடர்வார். என தெரிவித்துள்ளார்.