கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்திய ஜிம்பாப்வே

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

ஹராரே,

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 36.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் நியூமென் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய வங்காளதேச வீரர் நஹித் ரானா 10 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே வெற்றி

இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால், ஜிம்பாப்வே அணியின் சிறப்பான பந்து வீச்சால் வங்காளதேசம் 33.1 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசத்தை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரிச்சர்டு, பிராட் ஈவன்ஸ் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.