கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஜோசபின் என்கோமோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஜோசபின் என்கோமோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

SCROLL FOR NEXT