கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.

அபுதாபி,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இத்தொடர் தொடங்கியுள்ளது.

டாஸ்

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே , வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, ஜிம்பாப்வே வீரர்கள் களமிறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஜிம்பாப்வே 13 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்துள்ளது.

SCROLL FOR NEXT