ஹராரே,
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேசம் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய உள்ளது.