கொல்கத்தா,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இந்த நிலையில் காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகினார்.இந்த நிலையில், ஹர்ஷத் ராணாவுக்கு மாற்று வீரராக நவ்தீப் சைனி கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.