கிரிக்கெட்

ஐபிஎல்: கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் நாளை மோதல்

இரு அணிகளும் முதல் வெற்றி பெற கடுமையாக போராடும்.

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் நாளை கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் 6வதுலீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. 201 ரன்கள் அடித்த போதிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வெற்றிபெற முடியவில்லை.

இரு அணிகளும் முதல் வெற்றி பெற கடுமையாக போராடும்.