டெல்லி,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி 4வது இடத்திலும், மும்பை 5வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.