சென்னை,
10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 23-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் நாளை முதல் 25-ந் தேதி வரை டி.என்.பி.எல். இணையதளம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.