கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

பைசல் ஷினோசாத்,உசருல்லாஹ் நியசாய் இருவரும் சதமடித்து அசத்தினர்.

புலவாயோ,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹூப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய காலித் அஹ்மத்சாய் 31 ரன்களுக்கும், ஒஸ்மான் சதாத் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் பைசல் ஷினோசாத், உசருல்லாஹ் நியசாய் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். நிலைத்து விளையாடிய பைசல் ஷினோசாத்,உசருல்லாஹ் நியசாய் இருவரும் சதமடித்து அசத்தினர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 310 ரன்கள் குவித்தது.

SCROLL FOR NEXT