கால்பந்து

உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா பதேஹி - கனடாவில் நடனம், பாடலால் ரசிகர்களை கவர்ந்த பாலிவுட் நட்சத்திரம்

சிவப்பு நிற ஆடையில் அவர் ஆடிய நடன வீடியோகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

டொராண்டோ,

கோலாகலமாக தொடங்கியுள்ள பிபா உலகக் கோப்பை 2026 கால்பந்து திருவிழாவின் ஒரு பகுதியாக கனடாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா பதேஹி தனது பிரமாண்டமான நடன நிகழ்ச்சியால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

வைரலாகும் நோராவின் நடன வீடியோக்கள்

சிவப்பு நிற ஆடையில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து அவர் ஆடிய நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மூன்று நாடுகளில் பிரமாண்ட கொண்டாட்டம்

2026 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறுவதால், பல்வேறு நகரங்களில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மெக்சிகோ சிட்டியில் ஷகிரா - பர்னா பாய் கலைநிகழ்ச்சி

உலகக் கோப்பையின் தொடக்க விழா மெக்சிகோ சிட்டியில் நடைபெற்றது. இதில் உலகப் புகழ்பெற்ற பாடகர்களான ஷகீரா மற்றும் பர்னா பாய் இணைந்து "டாய் டாய்" (Dai Dai) உலகக் கோப்பை பாடலை மேடையில் பாடினர். மேலும் ஜே பால்வின், பெலிண்டா மற்றும் மனா உள்ளிட்ட பல முன்னணி லத்தீன் அமெரிக்க கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டொராண்டோவில் உலகப் பிரபலங்களுடன் நோரா

கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற விழாவில் நோரா பதேஹியுடன் இணைந்து மைக்கேல் பப்லே, அலனிஸ் மோரிசெட் மற்றும் அலெசியா காரா ஆகியோர் மேடையை அலங்கரித்தனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் கேட்டி பெர்ரி கலக்கல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி, அனிட்டா, பியூச்சர், லிசா, ரெமா மற்றும் டைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

வரலாற்றிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பை

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் தொடராக 2026 உலகக் கோப்பை அமைந்துள்ளது. ஜூன் 11-ம் தேதி தொடங்கிய இந்த பிரமாண்ட திருவிழா, ஜூலை 19-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவடைய உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை இந்த தொடர் ஈர்த்துள்ளது.