கால்பந்து

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு கிட்டும் - கணித்த யானை

உலகக் கோப்பை போட்டி முடிவு எப்படி இருக்கும் என்று ஜெர்மனியில் உள்ள கோலோன் உயிரியல் பூங்காவின் யானை கணித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்று மெக்சிகோவின் குவாடலஜாரா (GUADALAJARA) நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளைக் கொண்டு கணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு அணியுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள், டி-ஷர்ட்டுகள், பெட்டிகள் மற்றும் கால்பந்துகளை எடுத்து, வெற்றியாளர்களை வனவிலங்குகள் தேர்ந்தெடுத்தன.

மெக்சிகோ நாட்டு கொடியிலிருந்து பழங்களை ருசித்து சாப்பிட்ட யானைகள், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் மெக்சிகோ வெல்லும் என கணித்தன. இதேபோன்று கொரில்லாக்கள் ஸ்பெயினுக்கு எதிராக உருகுவே வெல்லும் என்றும், பஞ்சவண்ண கிளிகள் செக் குடியரசுக்கு எதிராக மெக்சிகோ வெற்றி பெறும் என்றும் கணித்தன. ஒட்டகச்சிவிங்கிகள் கொலம்பியாவுக்கு எதிராக காங்கோ அணியைத் தேர்ந்தெடுத்தன.

இந்தநிலையில், 2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனி மற்றும் குராசோ அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜெர்மனியே வெற்றி பெறும் என ஜெர்மனியில் உள்ள கோலோன் உயிரியல் பூங்காவின் யானை கணித்துள்ளது.