கால்பந்து

பரபரக்கும் அரையிறுதி... முதல் பாதியிலேயே கோல் அடித்த ஸ்பெயின்!

முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதி வருகின்றன. போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்பெயின் - பிரான்ஸ்

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி 3-வது இடத்துக்கான போட்டியில் விளையாடும். இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளதால் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகலும் தொடக்கத்தில் சிறப்பாக ஆடின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஸ்பெயின் வீரர் ஒயார்சபால் கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து பிரான்ஸ் அணி பதிலடி கொடுக்க போராடியும் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் நடைபெற உள்ளது.