துபாய்,
சவூதி அரேபியாவின் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி ஹால் மைதானத்தில் நடைபெற்ற யு-17 ஆசியக் கோப்பை 2026-ன் குரூப்-டி கடைசி லீக் போட்டியில், இந்திய ஆண்கள் அணி 0-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது. பிபா யு-17 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் இந்தியாவின் நீண்ட காலக் கனவு மீண்டும் ஒருமுறை கலைந்து போனது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வி அடைந்திருந்த இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா இத்தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.