பிலடெல்பியா,
பிரேசில் வீரர் ரபின்ஹா காயத்தால் ஹைதிக்கு எதிரான ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹைதிக்கு எதிராக இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பிரேசில் வீரர் ரபின்ஹாவுக்கு காயம் ஏற்பட்டது.
போட்டியின் முதல் பாதி முடிவடையும் நேரத்தில் ரபின்ஹா காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக ரயன் களமிறங்கினார். இதன் மூலம் ரயன் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுகமானார்.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் ஏற்கனவே காயம் காரணமாக அணிக்கு திரும்பாத நிலையில், தற்போது ரபின்ஹாவும் காயமடைந்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரபின்ஹாவின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகே அவர் அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகும்.
நெய்மர் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ரபின்ஹாவும் காயத்தால் வெளியேறியிருப்பது பிரேசில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த போட்டிக்கு முன்பாக அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.