கால்பந்து

10-வது நிமிடம் மெஸ்ஸிக்காக... அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி சமீபத்தில் அறிவித்தார்.

சிட்னி,

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மெஸ்ஸி

39 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். அந்த அணிக்காக 125 கோல்கள் அடித்துள்ளார். அவரது தலைமையில் அர்ஜென்டினா அணி 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதுதவிர, சர்வதேச மற்றும் கிளப் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ஓய்வு

இதற்கிடையில், சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி சமீபத்தில் அறிவித்தார். இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கவுரம்

இந்நிலையில், மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் இந்த வார இறுதியில் நடைபெறும் கால்பந்து போட்டிகளின்போது, 10-வது நிமிடத்தில் ஆட்டம் 60 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டு, கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸிக்கு கைதட்டி மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT