2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரில் முகமது சாலா தலைமையிலான எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வீழ்த்திய நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, காலிறுதிக்கு தகுதி பெற்றது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0-2 என்ற பின்னடைவை சந்தித்தது. இதற்கிடையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டார்.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோதும் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்கிறது. கடைசி வரை போராடிய எகிப்து அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோதும் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்கிறது. இன்று நடைபெற்ற போட்டியில் கடைசி வரை போராடிய எகிப்து அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.