மெக்சிகோ,
உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான 2026 பிபா உலகக்கோப்பை தொடர் மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
குரூப் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் துருக்கி மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக நகர்ந்தது.
ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நெஸ்டோரி இரங்குண்டா அபாரமாக கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதையடுத்து துருக்கி அணி சமநிலை கோலுக்காக கடுமையாக போராடியது.
முதல் பாதி முடிவில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. துருக்கி வீரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியிலும் ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் கானர் மெட்கால்ப் மேலும் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
இதன்பிறகு துருக்கி அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.