லண்டன்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால் பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் (இங்கிலாந்து) அணி 4-0 என்ற கோல் கணக்கில் கலாட்டாசராய் (துருக்கி) கிளப்பை பந்தாடியது.
முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்ட முகமது சலா பிற்பாதியில் 2 கோல்கள் அடித்து மிரட்டி னார். கலாட்டாசராய்க்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்த லிவர்பூல் அணி மொத்தத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.